வரியோடிய வண்டலாய்

சிந்திச் சிதறும்

சிறு நெல்லியென

சிதறித் தெறிக்கிறது மனது

ஒன்றில் தொடங்கி

மற்றதில் தாவி

பிறிதொன்றில் சாடி

அங்கும் நில்லாது

அடுத்ததிலும் தங்காது

மின்விசிறிக் காற்றில்

அலைந்தலையும் புகையென.

மழைநீரோடிய

சிற்றோடை தேங்கும்

வரியோடிய வண்டலாய்க்

கழிகிறது நாட்கள்

நன்றி : நேசமித்ரன் – “வரியோடிய வண்டல்”  பதம் தந்தமைக்கு

Pic Courtesy :www.abstractart.org

One Response so far | Have Your Say!

  1. நேசமித்ரன்  |  December 4th, 2010 at 12:55 pm #

    /சிந்திச் சிதறும்

    சிறு நெல்லியென//

    சப்தமற்ற வீழ்ச்சி/மயங்கிய உணர்வின் சொற்கள் /சிதறி பரவும் அருவி நீர் தெறிப்பைப் போலின்றி வீழ்ந்து தொடர்ந்தூறும் நிலை

    //மின்விசிறிக் காற்றில்

    அலைந்தலையும் புகையென. ///

    விலக்கும் சிறகாய் இல்லாமல் காற்றை வெட்டும் ரெக்கைகள் மின்விசிறியின் எந்திர கைகள். வளிவெளியில் உதிரம் நீரில் படர்வதாய் விரவிக் கலப்பதாய் இல்லாமல் வெட்டு பட்டுப் வெட்டுபட்டு சுழற்சிக்கு ஆட்பட்டு கலக்கும் புகை/ மாசுற்ற காற்றின் காயம்

    //மழைநீரோடிய

    சிற்றோடை தேங்கும்

    வரியோடிய வண்டலாய்க்

    கழிகிறது நாட்கள்//

    இயக்கம் தீர்ந்த வறண்ட நிலை / உந்துதலும் இயல்பான மணர் நகர்வும் தீர்ந்து போதல்/நீர் நகர்ந்த தடத்தின் படிவங்கள் காற்றால் காலடியால் இழிதல்

    காதலுக்கும் /பொருளியல் வாழ்வுக்கும்/ பிரியந்தீர்ந்த நிலைக்கும் /இன்மைகளின் சூன்யத்திற்கும் அப்பாலிருக்கும் சும்மா இருத்தலுக்கும் பொருந்தும் வரிகள்

    நேசமித்ரன் - Gravatar

Leave a Feedback

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>